இலங்கை அணி 18 மாதங்களுக்குப் பின்னர் ஒருநாள் தொடர் வெற்றியை பதிவு செய்தது!

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2 க்கு 1 என வெற்றி கொண்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெற்றது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் Charith Asalanka 47 ஓட்டங்களையும், Dhananjaya de Silva 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
204 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 30 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதற்கமைய தென்னாபிரிக்க அணியை இலங்கை அணி 78 ஓட்டங்களினால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

அத்துடன், இலங்கை அணி 18 மாதங்களுக்குப் பின்னர் பெற்ற முதலாவது ஒருநாள் தொடர் வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக Dushmantha Chameera மற்றும் தொடர் நாயகனாக Charith Asalanka ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *