யாழில் ரணிலுக்கு அமோக வரவேற்பு! – கூட்டமைப்பு எம்.பிக்களுடன் பல நிகழ்வுகளில் பங்கேற்பு

வடக்கு மாகாணத்துக்கு மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (14) காலை யாழ்ப்பாணத்துக்குச் சென்றனர்.

அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

இதில் முதலாவது நிகழ்வாக கோப்பாய் பிரதேச புதிய கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்துவைத்தார்.

பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் உயர்மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து யாழில் நடைபெற்ற பல நிகழ்வுகளிலும் பிரதமர் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வுகளில் அமைச்சர்களான அர்ஐுன ரணதுங்க, ராஜித சேனாரத்ன, அகிலவிராஐ் காரியவசம், சாகல ரத்நாயக்கா, வஜிர அபேவர்தன, இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன் உட்பட அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நாளையும் (15) நாளைமறுதினமும் (16) கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் பிரதமர் தலைமையியலான குழுவினர் சென்று அங்கும் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *