தலிபான் தலைவர்களில் ஒருவர் இந்திய இராணுவத்தில் பயிற்சி பெற்றவர்!

தலிபான்களில் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கருதப்படும் ஷேர் முகமது அப்பாஸ் இந்திய இராணுவத்துடன் பயிற்சி பெற்றவர் என்பது தெரிய வந்தது. 1971ஆம் ஆண்டு முதல் இந்திய இராணுவ அகாடமி ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு பயிச்சி அளித்து வருகிறது. அதன்படி 1982ஆம் ஆண்டு டேராடூனில் ஆப்கான் இராணுவத்தில் இருந்து பயிற்சிக்கு சேர்ந்தவர் ஷேர் முகமது அப்பாஸ். இங்கு இராணுவம் சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் பெற்று நாடு திரும்பிய ஷேர் முகமது 1996ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து விலகு தலிபான்களிடம் சேர்ந்துவிட்டார். அவரது ஆங்கில பேச்சு திறமையால் 1997-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1996ஆம் ஆண்டு, தலிபான் அரசை அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு பயணம் செய்தார். இருப்பினும், அது தோல்வியில் முடிவடைந்தது. ஸ்டானிக்ஜாய் தலைமையில்தான் தலிபான் குழு சீனாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தற்போது தலிபான்களின் சக்திவாய்ந்த 7 தலைவர்களில் ஒருவராக ஷேர் முகமது அப்பாஸ் கருதப்படுகிறார்.
…