மொபைல் போனை விழுங்கிய இளைஞர் அகற்ற போராடிய மருத்துவர்கள்!

நபர் ஒருவர் நோக்கியா மொபைல் போனை விழுங்கி பின்னர் அகற்ற மருத்துவர்கள் போராடிய சம்பவம் கொசோவோவில் நடந்துள்ளது.

பால்கான் (Balkan state)கொசோவோவை சேர்ந்த 33 வயதான அடையாளம் தெரியா நபர் ஒருவர் நோக்கியா மொபைல் போன் ஒன்றை எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார்.

இதனால், தொண்டையில் சிக்கிய அந்த போனை வயிற்று பகுதி செல்ல வைத்துள்ளனர். அந்த போனின் பேட்டரி அமிலதன்மை உடையதால் அவரின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என எண்ணி அதை அகற்ற மருத்துவர்கள் போராடுகின்றனர்.

இதன்பின்னர், எண்டோஸ்கோப் கருவியை பயன்படுத்தி, போனை மூன்று துண்டுகளாக பிரித்தெடுத்து அகற்றியுள்ளனர். மேலும், இந்த அறுவை சிகிச்சையின் போது எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தபட்ட நபர் அந்த கைப்பேசியை போதையில் விழுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனால் அவதிப்பட்ட அவரை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்,. இதுசம்பந்தமான புகைப்படங்களை இணையத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *