அர்ஜென்டினா மற்றும் ‌பிரேசில் போட்டி பாதியில் அதிரடியாக நிறுத்தம்!

பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான உலக கிண்ணம் தகுதிச் சுற்று ஆட்டம் அதிரடியாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா அணியின் நான்கு வீரர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்தே பிரேசில் சுகாதார அதிகாரிகளால் போட்டி தடுத்து நிறுத்தப்பட்டது.

Emi Martinez, Cristian Romero, Emi Buendia மற்றும் Giovani Lo Celso ஆகியோர் மீதே கொரோனா விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. இவர்கள் நால்வரும் அர்ஜென்டினா அணிக்காக களமிறங்கும் பொருட்டு, இங்கிலாந்தில் இருந்து பிரேசில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பிரேசில் நாட்டின் கொரோனா சிவப்பு பட்டியலில் இங்கிலாந்து சேர்க்கப்பட்டுள்ளதால், அந்த வீரர்கள் நால்வரும் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.

இந்த நிலையில் குறித்த வீரர்கள் நால்வரும் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிக்க, அதிகாரிகளிடம் பொய் சொன்னதாகவே தெரிய வந்துள்ளது. இதனிடையே ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் தகவல் அறிந்து விரைந்து வந்த பிரேசில் சுகாதாரத்துறை அதிகாரிகள் களத்துக்கு வந்து,

வக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இங்கிலாந்தில் இருந்து வந்த வீரர்கள் உடனடியாக களத்தைவிட்டு வெளியேறி, தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என கட்டாயப்படுத்தினர்.

சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஆகிய நட்சத்திர வீரர்கள் எடுத்துக்கூறியும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனையடுத்து ஆட்டம் கைவிடப்பட்டதாக நிர்வாகிகள் தரப்பு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *