அழிவின் விளிம்பில் 30% உயிரினங்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக‌ அமைக்கப்பட்ட இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐயுசிஎன்) வெளியிட்டுள்ள அறிக்கையில், அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களின் பட்டியல் மூலம் இயற்கை சூழ்ந்த உலகம் மிக மோசமான சூழலில் இருப்பது தெரிய வந்துள்ளது. எந்தெந்த உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதை கண்டறிய மதிப்பீடு செய்யப்பட்டதில், 1 லட்சத்து 38 ஆயிரம் உயிரினங்களில் கிட்டத்தட்ட 30%, அதாவது 38 ஆயிரத்து 543 உயிரினங்கள் அழிவை எதிர்நோக்கிய நிலையில் இருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

பருவநிலை மாற்றம் மற்றும் தங்கள் இருப்பிடங்கள் அழிந்து வருவதால் இந்த உயிரனங்கள் இல்லாமல் போகும் சூழலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் படி, ஆபத்தில் உள்ள உயிரினங்கள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான‌ உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. அரிய உயிரனமான‌ கொமோடோ டிராகன்கள் எனப்படும் உலகின் மிகப்பெரிய வாழும் பல்லிகள் கடைசி கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் வாழ் உயிரினங்களில் அரிய வகை சுறாக்கள் அழியும் நிலையில் உள்ளன. தற்போது ஏற்பட்டு வரும் உயிரின‌ங்களின் அழிவுக்கு காட்டை அழிப்பது, சுற்றுசூழலை மாசுப்படுத்துவது என மனிதர்கள் செய்யும் தவறுகளே காரணமாக அமைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *