மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் போராடினேன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நான் மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் போராடினேன் என தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மரணத்திற்கு அருகில் சென்று வந்த தனது அனுபவத்தையும் செயற்கை சுவாசக்கருவியின் உதவியை நாடவேண்டிய நிலையேற்பட்டதையும் வர்ணித்துள்ளார்.
நான் மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் போராடுகின்றேன் என்பது எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர் எனது உடல்நிலை மோசமடைவதை என்னால் உணரமுடிந்தது.அடுத்த நாள் காலை வரையில் நான் உயிர்வாழ மாட்டேன் என கருதினேன் என குறிப்பிட்டுள்ளார்.

எனது குருதிக்கு தொற்றுபரவியதால் நான் குணமடைவது மிகவும் கடினமானதாக காணப்பட்டது. என தெரிவித்துள்ள பவித்திரா வன்னியாராச்சி தனது உயிருக்காக முன்னிலை பணியாளர்களுக்கும் தொற்றுநோய் வைத்தியசாலையின் மருத்துவ பணியாளர்களுக்கும் தான் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்களை பூமியின் தெய்வீகம் என நான் தெரிவிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ள பவித்திராவன்னியாராச்சி அவர்கள் இல்லாவிட்டால் எனது மரணச்சடங்கையே பார்த்திருப்பீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *