தற்கொலை செய்யும் முன் மாமனாரிடம் பல மணி நேரம் பேசிய சித்ரா!

நடிகை சித்ரா தற்கொலை செய்யும் முன்பு மாமனாரிடம் பல மணி நேரம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி நள்ளிரவு, சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கடந்த திங்கட்கிழமை அன்று போலீசார் கைது செய்தனர்.

6 நாட்களாக ஹேம்நாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சித்ராவுக்கும் ஹேம்நாத்திற்கும் செப்டம்பர் மாதம் நிச்சயம் நடந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் 2021ம் ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.Ad

ஆனால், ஹேம்நாத்தின் தொடர் அழுத்தத்தால் அக்டோபர் 19ம் தேதியே பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கணவர் ஹேம்நாத்துடன் சென்று வந்தார், சித்ரா.

இதனால், சித்ராவின் தாய்க்கும், ஹேம்நாத்துக்கும் சிறிய அளவில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர், சித்ராவுடன் செல்லும் ஹேம்நாத் அடிக்கடி மது அருந்திவிட்டு சென்றுள்ளார்.

மேலும், நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது; சிலருடன் பேசக் கூடாது என ஹேம்நாத் நெருக்கடி கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு தளத்திலேயே சித்ராவிற்கும் ஹேம்நாத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவரின் நடவடிக்கையால் சில வாரங்களாக சோர்ந்து போயிருந்தார் சித்ரா. காதல் கணவர் என்பதால் மன அழுத்தத்தை நண்பர்களிடம் கூட சித்ரா பகிரவில்லை.

அதையடுத்து, சம்பவத்தன்று படப்பிடிப்பு தளத்தில் தம்பதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது.

காரில் வாக்குவாதம் செய்து கொண்டே இருவரும் விடுதிக்கு சென்றுள்ளனர்.சொகுசு விடுதியிலும் நள்ளிரவு வரை தம்பதி இடையே தொடர்ந்து தகராறு நடந்துள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சித்ரா, கணவர் கொடுமை தொடர்பாக மாமனாரிடம் சொல்ல முடிவு செய்துள்ளார்.

தற்கொலை செய்யும் முன், மாமனாரிடம் பல மணி நேரம் செல்போனில் பேசியுள்ளார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த சித்ரா, விடுதியில் குளிக்கச் செல்வதாகக் கூறி அறையை தாழிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின்னர், சித்ராவின் செல்போனை கைப்பற்றிய போலீசார், ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருதை கண்டுபிடித்தனர்.

இதனால் செல்போனை ஆய்வு செய்த காவல்துறை, தற்கொலை செய்து கொண்ட இரவு ஹேம்நாத் தந்தையிடம் சித்ரா பேசிய ஆடியோ ஆதாரத்தை மீட்டெடுத்தனர்.

அந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் ஹேம்நாத் சித்ராவிற்கு தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஹேம்நாத் மீது நசரத்பேட்டை போலீசார் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வழக்கப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், ஹேம்நாத்தை காவல் விசாரணையில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளில் நசரத்பேட்டை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்பே, மேலும் பல உண்மைகள் வெளியாகும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *