கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்

இலங்கையில் நேற்றைய தினம் (7) அடையாளம் காணப்பட்ட 449 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 177 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 174 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 25 பேர் குருநாகல் மாவட்டத்தையும் 14 பேர் கேகாலை மாவட்டத்தையும் சேந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் நுவரெலியாவை சேர்ந்த 12 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கண்டியில் 09 பேரும் புத்தளத்தில் 07 பேரும் இரத்தினபுரியில் 06 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு மட்டக்களப்பில் 04 பேரும் காலியில் 03 பேரும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் மொனராகலையில் தலா ஒருவரும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பிய 04 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ,இம்மாதம் முதலாம் திகதி 397 பேருக்கும் 02 ஆம் திகதி 275 பேருக்கும் 03 ஆம் திகதி 409 பேருக்கும் 04 ஆம் திகதி 443 பேருக்கும் 05 ஆம் திகதி 383 பேருக்கும் 06 ஆம் திகதி 400 பேருக்கும் 07 ஆம் திகதி 449 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *