விண்வெளிக்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட உயிரினம்!

லைக்கா என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய் நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் “குதிரியாவ்க்கா” (Kudryavka) என்பதாகும்.

பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 3 1957 இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1957 இல் உலகின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்ற முதலாவது விலங்காக லைக்கா திகழ்கின்றது. இப்பயணம் மனிதர்களின் விண்வெளிப் பயணத்திற்கு வழிவகுத்தது. இப்படத்தில் அது விமானக் கவசத்துடன் உள்ளது.

1959 ஆம் ஆண்டைச் சேர்ந்த லைக்காவுடனான உருமேனிய முத்திரை (சுருக்கமான விளக்கத்தில் “லைக்கா, பிரபஞ்சத்தினுள் சென்ற முதற் பயணி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)

விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்ததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது.

சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர். லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *