ஜனாதிபதியின் மக்கள் குறைகேள் பணியகம் தொடங்கிவைப்பு!

பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு குறைகேள் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு எஸ். எம். விக்ரமசிங்க அவர்களே மேற்படி பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமக்குரிய நிர்வாகப் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தும் போது அரச அதிகாரிகள் தமது பொறுப்பிலிருந்து விலகியிருந்தால்,

அல்லது தமது அதிகார வரம்புகளைத் தாண்டி செயற்பட்டிருந்தால்,

அதன் மூலம் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் அல்லது அழுத்தங்கள் ஏற்பட்டிருக்குமானால் –

அது பற்றி கண்டறிந்து தீர்வுகளை வழங்குவதே குறைகேள் பணியகம் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமாகும்.

கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தையில் உள்ள பழைய சார்ட்டட் வங்கிக் கட்டிடத்தின் 03வது மாடியில் இந்த பணியகம் அமைக்கப்பட்டுள்ளது.

தமது முறைப்பாடுகள் அல்லது மனக் குறைகளை – மேற்படி பணியகத்திற்கு நேரிலே வருகைதந்து தனிப்பட்ட முறையில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அல்லது –
ஜனாதிபதி செயலகத்தின் குறைகேள் அதிகாரி,
ஜனாதிபதி செயவகம்,
கொழும்பு 01′

  • என்ற முகவரிக்குத் தபால் மூலமும் தமது முறைப்பாடுகளையும் மனக்குறைகளையும் மக்கள் முன்வைக்க முடியும்.

அல்லது –
011 233 8073 என்ற தொலைபேசி / தொலைநகல் இலக்கத்திற்கு அழைத்தோ,

அல்லது –
ombudsman@presidentsoffice.lk
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மக்கள் தமது முறைப்பாடுகளை எழுதியோ அனுப்பிவைக்க முடியும்.

தமது இயல்பு வாழ்க்கையை மக்கள் அமைதியாகப் பேணுவதற்குத் தடையாக உள்ள – போதைப்பொருள் கடத்தல், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பான விடயங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை தமக்கு அனுப்பி வைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *