ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் யாழில் திறந்துவைப்பு!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) நினைவு நீச்சல் தடாகம் இன்று வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நீச்சல் தடாகத்தைத் திறந்துவைத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

2014ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதித் திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த நீச்சல் தடாகமானது இன்றைய தினம் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் மரம் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *