சஹ்ரான் குழுவின் தாக்குதல்: அதிரடித் தகவல்கள் வெளியீடு!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று சஹ்ரான் ஹாசீம் தலைமையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவர்கள் அழைப்பை ஏற்படுத்திய 1800 இற்கும் மேற்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பரிசீலனை செய்யப்படுகின்றன என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

அதேவேளை, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் 66 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலும், 21 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் மற்றும் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 142 சிம்கள், 23 மடிக் கணினிகள், 3 கணினிகள், 138 கைத்தொலைபேசிகள், 12 பென்ட்ரைவ்கள், 67 சீ.டி மற்றும் டீவீடிகள் என்பவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *