மலையக வீட்டுத்திட்டம் ‘அரசியல் மயம்’! இந்தியாவிடம் முறையிடுகிறது இ.தொ.கா!

இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத் திட்டம் அரசியல் – தொழிற்சங்க மயப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கான ஆதாரங்களைப் பட்டியலிட்டுக்காட்டி, கடிதம் ஊடாக இந்திய அரசாங்கத்திடம் முறையிடுவதற்கு இ.தொ.கா. நடவடிக்கை எடுத்துவருகின்றது என்று அதன் உபதலைவர்களுள் ஒருவரான கணபதி கனகராஜ் ‘புதுச்சுடர்’ இணையத்தளத்திடம் தெரிவித்தார்.

” இந்திய வம்சாவளி மக்களின் நலன்கருதியே வீடமைப்புத்திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய நிதிபங்களிப்பை இந்திய அரசு வழங்கியது.  எனினும், அது தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ஏனையோர் பழிவாங்கப்படுகின்றனர். இது பெரும் அநீதியாகும்.

எனவே, கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு அரசிடம் இது தொடர்பில் முறையிடப்படும்.மக்கள் நலத்திட்டத்தை கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் முன்னெடுக்கும்படி வலியுறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளோம்.

அத்துடன், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் இது குறித்து விளக்கமளிக்கப்படும். அதற்கான பூர்வாக்க நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *