மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை! – இலங்கை உறுதி

“மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு, காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்.”

-இவ்வாறு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் சட்டப்பிரிவு பிரதானியான மோனா ரிஷ்மவியிடம் (Mona Rishmawi) உறுதியளித்துள்ளார் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிக்கும், நீதி அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு இன்று (12) முற்பகல் நீதி அமைச்சில் நடைபெற்றது.

இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அபிவிருத்தியடைந்துவரும் நாடான இலங்கை, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள ஐ.நா. அதிகாரி, அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார் என நீதி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றும் என தான் நம்புவதாகவும் ஐ.நா. அதிகாரி தெரிவித்துள்ளார்.

(Mona Rishmawi is Chief of the Rule of Law, Equality and Non-Discrimination Branch of the UN Office at the High Commissioner for Human Rights (OHCHR).

ஐ.நா.  மனித உரிமைகள்  பேரவையின்  கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஜெனிவாவில்  ஆரம்பமாகவுள்ளது.இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *