இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!

இலங்கையில் பேருந்துகளில் புதிய தொழிநுட்பத்தின் ஊடாக பயணச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய முறைமையின் கீழ் நடத்துநர் அல்லது வாகன உதவியாளர் இன்றி பயணிகளிடம் கட்டணத்தை அறவிடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்துவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய தொழிநுட்பங்களுடன் கூடிய பயணச்சீட்டு இயந்திரங்கள் பேருந்துகளில் பொறுத்தப்படும். நடத்துனர் இன்றி அல்லது நடத்துனருடன் பேருந்துகள் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

எனினும் நடத்துனர்கள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

குறித்த இயந்திரங்களில் கையடக்க தொலைபேசிகள், வங்கி அட்டைகள், உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியும்.

இதனை விரைவில் அறிமுகப்படுத்துவதற்காக முழுமையாக தரவுகள் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *