புதிய அரசமைப்புக்கு சுதந்திரக்கட்சி போர்க்கொடி!

வடக்கு, கிழக்கை இணைக்கும் யோசனை புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்படுமானால் அதற்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று (12)  அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சு.கவின் உபதலைவர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

” பௌத்த மதத்துக்கு  வழங்கப்பட்டுள்ள முன்னிரிமை அவ்வாறே தொடரவேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக்கூடாது.பிரிவினைவாதத்தை ஊக்குவிக்ககூடிய திட்டங்கள் இடம்பெறக்கூடாது.

இவற்றை அடிப்படையாகக்கொண்டே புதிய அரசமைப்பு இயற்றப்படவேண்டும். நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய வகையில் அது தயாரிக்கப்படுமானால் அதற்கு ஆதரவளிக்கப்படும். எதிர்க்கட்சியில் இருப்பதால் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என அவசியமில்லை.

சுமந்திரம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் தேவைக்கேற்ப நாட்டில் சட்டங்களை இயற்ற இடமளிக்கமாட்டோம்.” என்றும் அவர் கூறினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *