பிரதமர் ரணிலின் செயலராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க!

பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மூன்றாவது தடவையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாகப் பிரிவில் ஓய்வுப்பெற்ற அதிகாரியான இவர், குறித்த துறையில் 30 வருடங்கள் அனுபவமிக்கவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பாடம்
தொட​ர்பில் விசேட பட்டதாரியுமாவார்.

அத்துடன் ஏக்கநாயக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் வீட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதானியாக செயற்பட்டுள்ளதுடன், மலேசியா மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகங்களிலும் கடமையாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *