ரணிலுக்கு நாமல் வாழ்த்து!

புதிய பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாமல் எம்.பி. தனது ‘டுவிட்டர்’ தளத்திலேயே வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்க மேற்கத்தேய நாடுகளுக்காகச் செயற்படாமல் நாட்டு மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம்” எனவும் நாமல் எம்.பி. அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *