1,800 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு – நுகர்வோர் சட்டத்தை மீறிய 1,500 வர்த்தகர்களுக்கு வழக்கு பதிவு!

நுகர்வோர் சட்டத்தை மீறிய 1,500 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.குறித்த காலப்பபகுதிக்குள் 1,800 வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச்  சோதனை நடவடிக்கைகள்,  ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்றும்,  நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்காக,  மாவட்ட மட்டத்தில் சிறப்புக்  குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் ஆகியன தொடர்பில்,  இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இதேநேரம், கடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானியில் குடிநீர் போத்தலுக்கான விலை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,  நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 350 தொடக்கம் 499 மில்லி லீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றின் அதிகூடிய சில்லரை விலை 26 ரூபாவாகும். அத்துடன், 500 தொடர்க்கம் 749 மில்லி லீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 35 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வௌியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 750 மில்லி லீற்றர் தொடக்கம் 999 மில்லி லீற்றர் வரையிலான தண்ணீர் பொத்தலின் புதிய விலை 40 ரூபாவாகும்.

அத்துடன், ஒரு  லீற்றர் தொடக்கம் 1.49 லீற்றர் தண்ணீர் போத்தலின் புதிய விலை 70 ரூபா, 1.5 லீற்றர் தொடக்கம் 4.99 லீற்றர் வரையிலான தண்ணீர் போத்தலின் சில்லறை விலை 70 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், 5 லீற்றர் தொடக்கம் 6.99 லீற்றர் வரையிலான தண்ணீர் பொத்தலின் விலை 150 ரூபாவாகும். 7 லீற்றர் உள்ளிட்ட அதற்கு அதிக லீற்றர் போத்திலின் விலை 150 ரூபாவாகும் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *