15 இலட்சத்தை மென்று தின்ற ஆடு !கோபத்தால் வெட்டி பிரியாணி செய்த குடும்பம்!

இந்த ஆடுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? கண்ணில எதை பார்த்தாலும் மேய ஆரம்பிச்சா… கடைசியில பிரியாணி ஆக வேண்டியதுதான்!

மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே ரனிலோவிக் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் விவசாயி ஒருவர் நிலம் வாங்க முடிவு செய்து, அதற்காக பணத்தை சேர்க்க ஆரம்பித்தார். ரொம்பவும் வறுமையான குடும்பம் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்க்க தொடங்கினார். கடைசியில் 16 லட்சம் ரூபாய் சேர்த்து விட்டார்.

இதைவைத்து 10 ஹெக்டர் நிலம் வாங்கவும் பிளான் குடும்பத்துடன் சேர்ந்து பிளான் பண்ணினர். எனவே பணத்தை எடுத்து வந்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடும்பத்தில் எல்லோரும் வயலுக்கு சென்றுவிட்டார்கள். போகும்போது கதவை மூடாமல் திறந்து விட்டு போய்விட்டிருக்கிறார்கள்.

கதவு திறந்து கிடக்கவும், அவர் வீட்டில் வளர்ந்து வந்த ஒரு ஆடு, உள்ளுக்குள் நுழைந்து டேபிள் மேல் இருந்த பணத்தை தின்றுவிட்டது. வயலிலிருந்து குடும்பத்தினர் வீடு திரும்பி வந்து பார்த்தால், பணத்தை காணோம்.

அதனால் ஆத்திரத்தில் அந்த ஆட்டை கொன்று குடும்பமே கோபத்துடன் சமைத்து சாப்பிட்டது. ஆட்டுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் அவர்களால் உழைத்து சம்பாதித்த அந்த 16 லட்ச ரூபாயை மறக்கவே முடியாமல் இன்னமும் சோகத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *