புலியுடன் நடைபயிற்சி செல்லும் சிறுவன்!

 

பாகிஸ்தானில் புலி ஒன்றுடன் சிறுவன் ஒருவன் நடைபயிற்சி செல்லும் காணொளி வெளியாகி வைரலாகியுள்ளதுடன் பலரை அதிர்ச்சியடையவும் வைத்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் நௌமன் ஹசன் என்பவரே இந்த காணொளியை வெளியிட்டுள்ளார்.

வீட்டுக்குள் புலியுடன் நடைபயிற்சி
குறித்த சிறுவன் வீட்டுக்குள் புலியுடன் நடைபயிற்சி செல்லும் காணொளியே வெளியாகியுள்ளது.

புலியின் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியை பிடித்துக்கொண்டு புலியின் பின்னால் அந்த சிறுவன் செல்வது பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

காணொளியை பார்த்தவர்களின் கருத்து
இந்த காணொளியை பார்த்த சிலர் சிறுவனின் தைரியத்தை பாராட்டி கருத்து பதிவிட்டனர். சிலர், கோபத்துடன் கருத்துகளை தெரிவித்தனர். சிறுவனை இவ்வாறு செய்ய வைத்தது அபத்தமானது என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *