தலவாக்கலையில் 200 வருடங்கள் பழமையான மரம் முறிவு- போக்குவரத்து ஸ்தம்பிதம்!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் 22.11.2018 அன்று அதிகாலை 5 மணியளவில் 200 வருடம் பழமைவாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனால் அவ் வீதியூடான பொது போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு,  அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். மேலும் மரத்திற்கு கீழே இருந்த ஆலயம் ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சிறிய வாகனங்கள் மட்டும் வீழுந்த மரத்தின் ஊடக செல்கின்ற அதேவேளை, கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளதுஎனினும், இந்த மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் பிரதேச பொது மக்களும், தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸாரும் செயற்பட்டு வருகின்றனர்.

அத்தோடு, மின்சார இணைப்புகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளில் லிந்துலை மின்சார சபையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *