அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண நாளை சர்வகட்சி கூட்டம் – ஜனாதிபதி அவசர நடவடிக்கை!

இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டுள்ளதால், கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி – பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

 
ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு இவ்விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறுகட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகரும் கலந்துகொள்வார்.
திங்கட்கிழமை நாடாளுமன்றம்கூடவுள்ள நிலையிலேயே அதற்கு முதல்நாள் – நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கின்றார்.

ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கை தமிழரசுக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகியன நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *