ஜனாதிபதியின் கௌரவம் இழக்கப்பட்டு வருகின்றது! – சபாநாயகர் பதில் கடிதம்
நீண்ட காலமாக, அரசியல் வாழ்க்கையில், ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவினால் சம்பாதித்து வைக்கப்பட்டிருந்த நற்பெயரும் கௌரவமும், மிக விரைவில் இழக்கப்பட்டு வருகின்றது என சபாநாயகர் கரு ஜயசூரியவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயங்களை, ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி, சபாநாயகரால் ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அதன் உள்ளடக்கங்களைத் தான் நிராகரிப்பதாக, ஜனாதிபதியால் சபாநாயகருக்கு பதில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் அந்தப் பதில் கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்படி கடிதத்தை, சபாநாயகர் அனுப்பிவைத்துள்ளார்.