கவிழ்ந்தது நல்லாட்சி! பிரதமரானார் மஹிந்த!! ரணிலுக்கு மைத்திரி வேட்டு!!!
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட கூட்டரசு இன்றிரவு முடிவுக்கு வந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டரசிலிருந்து வெளியேறி பொது எதிரணியான மஹிந்த அணியுடன் இணைந்து சற்றுமுன்னர் ஆட்சி அமைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரி முன்னிலையில் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
மைத்திரியின் இந்தத் திடீர் காய்நகர்த்தலால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.