இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கிய ஈரான்

இஸ்ரேலிய எல்லைக்கு வெளியே 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ வானொலியொன்று தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் உதவியுடன் இஸ்ரேலிய எல்லைக்கு வெளியே 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இரண்டாம் இணைப்பு

இஸ்ரேலில் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ்( Golan Heights), நெவாடிம்(Nevatim), டிமோனா(Dimona) மற்றும் ஈலாட்( Eilat) ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் அறிவிக்கும் வரை பாதுகாப்பு இடங்களுக்கு அருகில் இருக்குமாறு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெவாடிம்(Nevatim) என்பது இஸ்ரேலிய விமான தளத்தின் தளமாகும். டிமோனாவின் புறநகரில் இஸ்ரேலுக்கு அணு உலை (nuclear reactor)உள்ளது. ஈலாட் என்பது இஸ்ரேலின் தெற்கு செங்கடல் துறைமுகமாகும், இது யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளான பகுதியாகும்.

ஆளில்லா வான்வழி விமானங்களை (UAV) யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுடன் ஒருங்கிணைத்து இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளதாகவும் அவை ஒரே நேரத்தில் இஸ்ரேலை அடையும் என்றும் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே கூறியுள்ளது.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கிய ஈரான் | Iran Israel Latest News Launches Retaliatory Strik

இதேவேளை இஸ்ரேலிய துறைமுகங்கள் தாக்குதலுக்கு சாத்தியமான இலக்குகளாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை குறிவைத்து ஈரானிய ஆளில்லா விமானம் தாக்கும் அச்சத்தின் மத்தியில் எகிப்தின் வான் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எகிப்தின் இராணுவ ஜெனரல் கமாண்ட் நிலைமையைக் கண்காணிக்கவும், நாட்டின் வான்வெளி தொடர்பாக தேவையான முடிவுகளை எடுக்கவும் ஒரு குழுவை அமைத்துள்ளதாக எகிப்திய இராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பின்னர், மேலும் உறுதியற்ற தன்மை மற்றும் பதற்றம் போன்ற காரணிகளில் இருந்து அப்பகுதியையும் மக்களையும் காப்பாற்ற “மிகக் கட்டுப்பாட்டை” கடைப்பிடிக்குமாறு எகிப்திய வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

முதலாம் இணைப்பு

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரான் ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மொத்தம் 50 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியுள்ளதாக கூறப்படுவதோடு இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஜோர்தான், ஈரான் மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இராணுவமும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இஸ்ரேல் மீது ஈரான் தொடுக்கும் நேரடி தாக்குதல் இதுவாகும்.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கிய ஈரான் | Iran Israel Latest News Launches Retaliatory Strik

மேலும், 50 ட்ரோன்கள் என கணக்கிடபப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ட்ரோனும் சுமார் 20 கிலோ அளவுக்கு குண்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகதாக கூறப்படுகின்றது.

ஆனால், இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *