அலுவலகத்தை வாடகைக்கு விட்டு கோடிகணக்கில் சம்பாதிக்கும் கோலி!

அலுவலக கட்டடத்தை குத்தகைக்கு விட்டு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சில வருடங்களுக்கு முன்பு இந்திய தலைநகர் டெல்லி குருகிராமில் 18,430 சதுர அடி பரப்பிலான அலுவலக கட்டடம் ஒன்றை வாங்கியுள்ளார்.

தற்போது, இந்த அலுவலக கட்டடத்தை மைண்டு இன்டகிரிடேடடு சல்யூஷன்ஸ் (Mynd Integrated Solutions Pvt Ltd) நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார்.

இதுகுறித்த ரியல் எஸ்டேட் டேட்டா அனலிடிக்ஸ் நிறுவனமான சிஆர்இ மேட்ரிக்ஸ் ( CRE Matrix) வெளியிட்ட அறிக்கையின் படி, விராட் கோலியின் அலுவலக கட்டடம் ஆண்டுக்கு ரூ.1.27 கோடி வாடகைக்குத் தரப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, குருகிராமின் செக்டார் 68ல் உள்ள ரீச் கொமர்சியா கார்ப்பரேட் டவரில் (Reach Comercia Corporate Tower) மொத்தம் 18,430 சதுர அடியில் 12 அலுவலக இடங்களை குத்தகைக்கு விட்டுள்ளார்.

அதாவது, மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.8.85 லட்சம் வாடகையில் ஒப்பந்தம் முடிக்கப்பட்டது.

Mynd Integrated Solutions என்ற டெல்லியை தளமாக கொண்ட நிறுவனம் இந்த இடத்தை குத்தகைக்கு பெற்றுள்ளது.

இந்த பரிவர்த்தனையில் பதிவுக் கட்டணமாக ரூ.50,010 செலுத்தப்பட்டதாகவும், பரிவர்த்தனையின்போது முத்திரைத் தொகையாக ரூ.3.83 லட்சம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கோலியின் சகோதரரான பதிவு செய்யப்பட்ட ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி (ஜிபிஏ) ஹோல்டரான விகாஸ் கோலி மூலம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

பரிவர்த்தனையின் முத்திரை கட்டணப் பதிவு ஜூன் 22, 2023 -ல் நிறைவடைந்தாலும், ஒப்பந்தத்தின் ஆவணங்கள் மார்ச் 2024 வரை முடிக்கப்படவில்லை.

ஆவணங்களின்படி, குத்தகையானது மார்ச் 28, 2023 இல் தொடங்கி 9 ஆண்டுகள் நீடிக்கும். மேலும், வாடகைப் பணம் ஜூலை 1, 2023 அன்று தொடங்கியது.

அதுமட்டுமல்லாமல், ஆவணங்களின் படி ஐந்து சதவீத வருடாந்திர வாடகை உயர்வு மற்றும் ஒரு சதுர அடிக்கு ரூ.14 மாதாந்திர பொதுப் பகுதி பராமரிப்புக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *