ஐ.பி.எல். தொடரால் எழுந்துள்ள சந்தேகம்!

சிம்பாப்வே அணி இதுவரை இந்தியாவில் வந்து இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடியது கிடையாது.

முதன்முறையாக ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலகக் கிண்ணம் மற்றும் பொதுத் தேர்தலைக் கருத்தில்கொண்டு ஐ.பி.எல். தொடர் முன்னதாகவே மார்ச் 23ஆம் திகதி தொடங்கப்படுகின்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரை பெப்ரவரி 10ஆம் திகதிதான் முடிக்கின்றது.

அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெப்ரவரி 24ஆம் திகதி முதல் மார்ச் 13 ஆம் திகதி வரை ஆஸ்திரேலியாவுடன் இரண்டு ரி – 20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகின்றது.

ஆஸ்திரேலியா தொடருக்கும் ஐ.பி.எல். தொடருக்கும் இடையே 10 நாட்கள்தான் உள்ளதால் இந்தியா – சிம்பாப்வே தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை டெஸ்ட் போட்டி ரி – 20 போட்டியாக மாறலாம் அல்லது தொடர் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *