அவுஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை மயில்கள்

அவுஸ்திரேலியாவின் வடக்கு பிராந்திய நகரமான எலியட் நகருக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மயில்களால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால், நகரில் உள்ள மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அவற்றை வளர்க்க விரும்புவோருக்கு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மயில்கள் சகல இடங்களிலும் எச்சமிடுவது, வீட்டுத்தோட்டங்களை அழிப்பது மாத்திரமல்லது அவற்றின் சத்தங்கள் பெரும் தலைவலியாக இருப்பதாக பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பிராந்திய அதிகாரிகள், 26 மயில்களை பராமரிப்பதற்காக புதிய வீடுகளை கண்டறிந்துள்ளனர்.

எனினும் மயில்களை அடைத்து வைப்பதற்கான கூடுகள் இதுவரை நிர்மாணித்து முடிக்கப்படவில்லை.

ABC

Peacocks in Australasian region ABC

டேர்பனில் இருந்து சுமார் 700 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள எலியட் வாசிகளாக சுமார் 290 பேர், இயற்கையின் கம்பீரமான பறவையான மயில்கள் பெருக்கத்தால் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்னர்.

மயில்களின் கண்களுக்கு புத்துணர்ச்சியளிக்கும் அற்புதமான காட்சிகளை விட, அவற்றால் ஏற்படும் தொந்தரவு மக்களை கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் எலியட் பிரதேசத்திற்கு இந்த மயில்கள் எப்படி சென்றன என்பதை அதிகாரிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தமது தாயமான இந்தியா மற்றும் இலங்கையின் காடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாட்டுக்கு இந்த மயில்கள் பறந்து சென்று தமது ஆதிக்கத்தை பரப்பி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *