நற்பிட்டிமுனை பிரதேச கட்சி முக்கியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள்! 

கே எ ஹமீட்

கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள நற்பிட்டிமுனைப் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் கட்சித் தலைவருக்கும், கட்சியின் உயர் பீடத்திற்கும் எமது குழுவினால் முன்வைக்கப்படும் என நற்பிட்டிமுனை 01ம் கிராம சேவகர் பிரிவுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புணரமைப்புக் கூட்டம் மக்பூல் (BA) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
தலைவர் அஸ்றப் அவர்கள் கட்சியை ஆரம்பித்த காலத்தில் இருந்து நற்பிட்டிமுனை பிரதேச மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பாரிய பங்கினை வகித்து வருகின்றனர். நற்பிட்டிமுனை பிரதேசத்தில் இருந்து பாராளுமன்ற, மாகாண சபை, பிரதிநிதித்துவங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையில் கல்முனை மாநகர சபை அதிகாரத்தில் முக்கிய பதவி வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக கட்சியின் தலைவருக்கும், கட்சியின் உயர் பீடத்துக்கும் எமது குழுவினால் முன்வைக்கப்படும்.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள நற்பிட்டிமுனை, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி, ஒலுவில், பாலமுனை, இறக்காமம், வரிபத்தான்சேனை, வாங்காமம், நாவிதன் வெளி போன்ற பிரதேசங்கள் தான் தலைவர் அஸ்றப் அவர்களையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் நூறு வீதம் ஏற்றுக்கொண்ட பிரதேசங்களாகும். காலப்போக்கில் தான் பெரிய ஊர்கள் பெரும்பான்மையாக எமது கட்சியை ஏற்றுக்கொண்டனர்.
நற்பிட்டிமுனை பிரதேசத்தில் எல்லா கிராம சேவகர் பிரிவுகளிலும் கட்சி கிளைகள் புணரமைப்பு பணிகள் நிறைவு செய்யபட்டுள்ளது. அடுத்த கட்டமாக இளைஞர் கிளைகள், மகளிர் கிளைகள் புணரமைப்பு வேலைத்திட்டங்கள் நிறைவு செய்த பின் நற்பிட்டிமுனை பிரதேசத்திற்கான மத்திய குழு கட்சியின் தலைவரால் நியமிக்கப்படும். இதன் பின் கட்சி கட்டமைப்புக்கு ஏற்ப செயற்பாடுகள் முன்னெப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இனிமேல் கட்சிக்குள் குழுக்களாக இயங்கும் செயற்பாடுகள் நிருத்தப்பட வேண்டும். கட்சி தொடர்பான செயற்பாடுகள், அபிவிருத்தி தொடர்பான விடயங்கள், மக்கள் தொடர்பான விடயங்களை எல்லோரும் ஒற்றுமையாக அமர்ந்து தீர்மானங்கள் எடுக்க கூடிய நடைமுறைகளை செயற்படுத்தும் போது தான் கட்சியின் கிராம மட்ட பலம் பலப்படுத்தும் நிலைமை ஏற்படும் என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின்அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.சமால்டீன், நற்பிட்டிமுனை மத்தியகுழுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.ஜஃபர், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *