பூசகரின் உதவியாளர் தங்கியிருந்த அறையில் கருத்தடை மாத்திரைகள்! – தொலைபேசியில் 180 பெண்களின் புகைப்படங்கள்

திருகோணமலை மூதூர் கிளிவெட்டி கோயில் பூசகருக்கு உதவியாக இருந்தவரின் கையடக்கத் தொலைபேசியில் மூதூர் கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 180 பெண்களின் புகைப்படங்களும், அவரது அறையில் கருத்தடை மாத்திரை அடங்கிய 3 அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூசகருக்கு உதவியாக இருந்த சிவா என அழைக்கப்படும் புஹாரி முகமது லாகீர் இரண்டு வருட காலமாக கோயிலில் பூஜை நேரத்தில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையைக் கலந்து கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மூதூர் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளிலேயே அவர் தங்கியிருந்த அறையிலிருந்து மூன்று கருத்தடை மாத்திரை அடங்கிய அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அவர் இஸ்லாமியர் என்பதற்கு ஆதாரமாக திருக்குர் ஆன் நூலும் தொப்பியும்
கண்டுடெடுக்கப்பட்டள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. .

புலனாய்வுப் பிரிவினர் அவரிடமிருந்த கையடக்கத் தொலைபேசியை ப் பரிசீலித்தபோது கிளிவெட்டி மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த 180 பெண்களின் புகைப்படங்களை அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் சேமித்து வைத்துள்ளார்.

ஏற்கனவே பல சமூக முரண்பாடான செயற்பாடுகளுக்காக நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த நபர் ஒரு தமிழ்ப் பெண் உட்பட மூன்று பெண்களை இமணம் முடித்தவர் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் பலருடன் நெருக்கமாகத் தொடர்புகொண்டுள்ள இவர் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையைக் கலந்துகொடுத்தாரா என்பது தொடர்பாக மூதூர் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அவர் தன்னையொரு தனியார் துறை ஆசிரியர் என்று கூறிவந்துள்ள நிலையில், ஒரு மாணவியை பாலியல் வன்மத்துக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, திருமலை விகாரை வீதியிலுள்ள வீடொன்றில் கிழங்குப் பொரி வியாபாரி ஒருவர் பொரி வியாபாரத்தில் கருத்தடை மாத்திரையைக் கலந்து பொருட்களை விற்றுள்ளார் என்ற தகவலுக்கு அமைய அவர் குடியிருந்த வீடு பொதுமக்களால் உடைத்தெரியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *