அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடைக்கு அனுமதி!

 

அயோத்தி ராமர் கோயில் அருகே கே.எஃப்.சி. கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.

பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் ஜனவரி 22 -ம் திகதி ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.

தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தியில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வருமானமும் பெருகியுள்ளது. இந்த நேரத்தில் அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், KFC கடையில் சைவ உணவுகளை மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. ராமர் கோயிலில் இருந்து 5 கி.மீ தொலையில் உணவு விற்பனை நிலையங்கள் இயங்கி வருகிறது. அதில் இறைச்சியையும், மதுபானங்களையும் விற்பனை செய்யக் கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அங்கு ஏற்கனவே, Dominos, Pizza Hut போன்ற கடைகளில் சைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், KFC கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *