இஸ்ரேலுக்கு ஆதரவாக சைகை… பிரபல கால்பந்து வீரரை கைது!

 

துருக்கியில் கால்பந்து விளையாட்டின் போது இஸ்ரேலிய வீரர் ஒருவர் தமது நாட்டுக்கு ஆதரவாக சைகை செய்ததால் கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக சைகை
இஸ்ரேலிய கால்பந்து வீரரான Sagiv Jehezkel என்பவரே ஞாயிறன்று துருக்கியின் Antalya பகுதியில் நடந்த விளையாட்டின் முடிவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக சைகை காட்டியுள்ளார்.

இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்த, Sagiv Jehezkel உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான Sagiv Jehezkel துருக்கியின் Antalyaspor என்ற அணிக்காக கடந்த செப்டம்பர் மாதம் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், துருக்கியின் சூப்பர் லீக் ஆட்டத்தின் போது தனது கையில் சுற்றப்பட்டிருந்த துணியில் 100 நாட்கள் 7/10 என குறிப்பிட்டிருந்ததை கமெராவுக்கு காண்பித்துள்ளார். இதுவே அவரை கைது செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், நாட்டைவிட்டும் வெளியேற்ற வைத்துள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகள் மீது இஸ்ரேல் போர் தொடுக்க தொடங்கி ஞாயிறன்று 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த 100 நாட்களில் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 23,000 கடந்துள்ளது.

இந்த நிலையிலேயே அதை நினைவுப்படுத்தும் வகையில் Sagiv Jehezkel நடந்துகொண்டுள்ளார். துருக்கியின் நீதித்துறை அமைச்சர் Yilmaz Tunc இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வேட்டை நாய்
மேலும், கால்பந்து வீரரின் உடையில் காணப்பட்ட இஸ்ரேலின் வேட்டை நாய் அந்த நபர் என்று சாடியுள்ளார் துருக்கி ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர். ஆனால் துருக்கி மக்களை ஆத்திரமடைய செய்யும் எண்ணம் தமக்கு இல்லை என்றும்,

இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்றே தாம் விரும்புவதாகவும் Sagiv Jehezkel குறிப்பிட்டுள்ளார். போருக்கு ஆதரவான நபர் தாம் அல்ல என்றும், காஸாவில் சிக்கியுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தமது கோரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டாலும், அவர் துருக்கி திரும்ப நேர்ந்தால் அவர் மீது நடவடிக்கை முன்னெடுக்கப்படுமா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை. இதனிடையே Antalyaspor அணி நிர்வாகம் அவரை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *