இளம் தடகள வீரர் திடீர் மரணம்!

உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்றவரான கத்தார் நாட்டு இளம் தடகள வீரர் அப்தலெலா ஹாரவுன் இன்று உயிரிழந்து உள்ளார்.

கத்தார் நாட்டின் இளம் தடகள வீரர் அப்தலெலா ஹாரவுன் (வயது 24). கடந்த 2017ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் 400 மீட்டர் தடகள போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார்.

இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்து உள்ளார். இதனை கத்தார் நாட்டு ஒலிம்பிக் கமிட்டி டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய 400 மீட்டர் தடகள போட்டியில் தனது 18வது வயதில் சாதனை படைத்து பிரபல வீரரானார்.

அதற்கு அடுத்த ஆண்டு போர்ட்லேண்டில் நடந்த போட்டி ஒன்றில் ஆசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்றார். சூடான் நாட்டில் பிறந்தவரான ஹாரவுன் குத்து சண்டை மற்றும் கால்பந்து போட்டிகளில் முதலில் ஆர்வம் காட்டினார்.அதன்பின்பு அவரது 16வது வயதில் ஆசிரியர் ஒருவரால் அவரது தடகள திறமை வெளிப்பட்டது. முதல் 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 49 வினாடிகளில் இலக்கை கடந்து ஓடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *