இனி WhatsAppஇல மெசேஜை Pin செய்யலாம்.!

மிகவும் பிரபலாமான மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப், தனது பயனர்களை தக்கவைக்கவும், புதிய பயனர்களை தன்வசம் ஈர்க்கவும் வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‘சேனல் அலெர்ட்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

இப்போது அடுத்த அம்சமாக அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மெசேஜை பின் (Pin Message) செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் ஒரு தனிப்பட்ட நபரின் சாட்டிலோ அல்லது குரூப் சாட்களிலோ இருக்கக்கூடிய மெசேஜை பின் செய்து வைக்க முடியும்.

இதில் டெக்ஸ்ட், போட்டோஸ் மற்றும் எமோஜிகள் உட்பட அனைத்து வகையான மெசேஜ்களையும் பயனர்களை பின் செய்ய முடியும். ஒரு மெசேஜை 24 மணி நேரம், 7 நாள் அல்லது 30 நாட்கள் வரை உங்களது சாட்டில் பின் செய்து வைத்திருக்க முடியும். இதனால் உங்கள் நண்பருக்கு நீங்கள் அவர் மறந்து விடக்கூடாது என நினைக்கும் மெசேஜை பின் செய்து வைக்கலாம்.

இது நினைவு படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாட்ஸ்அப் குரூப்பை பொருத்தவரை, குரூப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒரு மெசேஜை பின் செய்யலாமா வேண்டாமா என்பதை குரூப்பின் அட்மின்கள் தேர்வு செய்ய முடியும். இப்போது ஒரு நேரத்தில் ஒரே ஒரு மெசேஜ் மட்டுமே பின் செய்ய முடியும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட செய்திகளை பின் செய்வதற்கான முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த அம்சம் குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. வரும் காலங்களில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

மெசேஜை எப்படி பின் செய்வது.?
முதலில் ஒரு சாட்டை திறக்க வேண்டும்.
அந்த சாட்டில் நீங்கள் பின் செய்ய நினைக்கும் மெசேஜை தேர்வு செய்து, நீண்ட நேரம் கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு வலதுபுறம் இருக்கக்கூடிய மூன்று புள்ளிகள் மெனுவை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் பின் (Pin) என்பதை கிளிக் செய்யவும்.
அதன்பிறகு மெசேஜை எத்தனை நாள் பின் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். (24 மணி நேரம், 7 நாள், 30 நாள்)
இப்போது நீங்கள் தேர்வு செய்த மெசேஜ் அந்த சாட்டில் பின் செய்யப்பட்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *