கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் இருந்த உலகின் 2வது கொடிய விஷப் பாம்பு !

 

அவுஸ்திரேலியாவில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் இருந்து விஷ பாம்பு ஒன்றை சிறுவன் கண்டுபிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் 2வது விஷ பாம்பு

வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவில் வீடு ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் கொடூர விஷ தன்மையுடைய பாம்பு ஒன்று இருப்பதை அந்த வீட்டின் சிறுவன் கண்டுபிடித்த பிறகு குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

இதையடுத்து சிறுவனின் தாய் தங்களுடைய வரவேற்பறையில் கிழக்கு பழுப்பு பாம்பு (eastern brown snakes) ஊடுருவி இருப்பதாக சம்பந்தப்பட்ட பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

நியூஸ்வீக் வழங்கிய தகவல் அடிப்படையில், குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த Drew Godfrey என்ற பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.

பின் பாம்பை லாவகமாக பிடித்த Drew Godfrey இது தொடர்பான வீடியோ காட்சிகளை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த மீட்பு குறித்து பத்திரிக்கைக்கு Drew Godfrey வழங்கிய தகவலில், கிழக்கு பழுப்பு பாம்பு (eastern brown snakes) உலகின் 2வது கொடிய விஷத் தன்மை கொண்ட தரைப் பாம்பு என்று தெரிவித்துள்ளார்.

இது கிழக்கு மற்றும் தெற்கு அவுஸ்திரேலிய பகுதிகளில் காணப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் பாம்பு கடியால் உயிரிழந்த பெரும்பாலானோருக்கு இந்த கிழக்கு பழுப்பு பாம்பு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்த பாம்புகள் ஏறக்குறைய 50 முதல் 60 செ.மீ நீளம் வளரக்கூடியது. அத்துடன் இதனை கையாளுவது மிகவும் கடினமானது மற்றும் ஆபத்தானது அத்துடன் தற்போது வீட்டில் பிடிபட்டுள்ள பாம்பு இளம் வயதுடையது என்று பாம்பு பிடிப்பவர் Godfrey உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *