கடவுச்சீட்டு உட்பட எந்த ஆவணங்களும் இன்றி விமானத்தில் 8,600 Km பயணித்த நபர்!

 

கடவுச்சீட்டு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் கடந்த நவம்பர் மாதம் ரஷ்யர் ஒருவர் ஐரோப்பாவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விமானத்தில் பயணித்த சம்பவம் அதிகாரிகளை திணறடிக்க வைத்துள்ளது.

அவர் மீது பெடரல் நடவடிக்கைகள்
டென்மார்க்கில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மீறினார் என்பது தொடர்பில் எதுவும் நிலைவில் இல்லை என்றே குறித்த நபர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் மீது பெடரல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டு, வழக்கு பதிந்துள்ளனர். 46 வயதான Sergey Ochigava கடந்த நவம்பர் 4ம் திகதி கோபன்ஹேகனில் இருந்து ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானம் 931ல் பயணித்து சுமார் 8,600 km கடந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

தனது கடவுச்சீட்டை தான் பயணித்த விமானத்தில் விட்டுச் சென்றதாக அவர் முதலில் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால் விசாரணையில் Ochigava பயணப்பட்டதாக தரவுகள் எதுவும் பதிவாகவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனையடுத்து, சட்டவிரோதமாக பயணம் செய்தவர் என்ற முறையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனால் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். அவர் மீதான இரண்டாவது கட்ட விசாரணையானது டிசம்பர் 26ம் திகதி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் வரையில் சிறை
அந்த நபரிடம் கடவுச்சீட்டு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இருக்கவில்லை, ஆனால் அவரது உடைமைகளில் இருந்து ரஷ்ய மற்றும் இஸ்ரேலிய அடையாள அட்டைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இருப்பினும் அவர் மீதான புகாரில் அவர் எந்த நாட்டவர் என்பதை குறிப்பிடவில்லை என்றே கூறப்படுகிரது. இந்த நிலையில், அவரது அலைபேசியில் அவரது பெயர், பிறந்த திகதி மற்றும் கடவுச்சீட்டு எண்ணைக் கொண்ட கடவுச்சீட்டு நகலை ஓரளவு காட்டிய புகைப்படத்தைக் கண்டறிந்தனர், ஆனால் அவரது புகைப்படம் இல்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மேலும், பயணிகள் எவரும் பதிவு செய்யாத ஒரு இருக்கையில் Ochigava பயணப்பட்டதாக விமான ஊழியர்கள் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். விமானம் புறப்பட்டதும், அவர் சக பயணிகள் அருகாமையில் சென்று பேச முயன்றதாகவும், இருக்கையை அடிக்கடி மாற்றி வந்ததாகவும் கூறியுள்ளனர்.

உணவு வேளையின் போது இருவருக்கான உணவைக் கேட்டு வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது பொலிஸ் காவலில் உள்ள அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமனால் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *