இஸ்ரேலை கண்டிக்க ஐ.நாவில் தீர்மானம்! இந்தியா ஆதரவாக வாக்களிப்பு!!

 

இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில், ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.

கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதியிலும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் பகுதியிலும், இஸ்ரேல் தொடர்ந்து குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைக் கண்டிக்கும் வகையில், ஐ.ந-வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

18 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக, இந்தியா வாக்களித்திருக்கிறது.

இது தொடர்பில் பேசிய ஐ.நாவின் இந்தியாவுக்கான துணைப் பிரதிநிதி யோஜ்னா படேல், “இந்தப் பிரச்னையில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிசெய்ய விரும்புகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது. பயங்கரவாதத்தில் எந்தவித சமரசத்தையம் ஏற்க முடியாது.

எங்கள் எண்ணங்கள் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களிடமும் இருக்கிறது. அவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வுகாண வேண்டும். காசா மக்களுக்கு சர்வதேச சமூகம் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை வரவேற்கிறோம். இந்தியாவும் அந்த முயற்சிக்குப் பங்களித்திருக்கிறது.

இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை, இந்தியா எப்போதும் வலியுறுத்துகிறது.

அதுதான் இறையாண்மைமிக்க, சுதந்திரமான பலஸ்தீனத்தை நிறுவுவதற்கு வழிவகுக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *