நகரத்தில் இருந்து கிராமத்திற்கு வந்தால் ஒரு கோடி ரூபா

மக்கள் தொகை குறைந்து வருவதால் கலாப்ரியா என்ற இத்தாலியப் பகுதி சிறிய கிராமங்களுக்குச் செல்லத் தயாராக இருக்கும் தனிநபர்களுக்கு €28,000 (11,357,468.36 இலங்கை ரூபா)வழங்கும் தனித்துவமான திட்டத்தை இத்தாலி கொண்டுவந்துள்ளது.

கலாப்ரியா கிராமத்தின் சில ஆண்டுகளாக மக்கள் தொகை வீழ்ச்சி, உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த கிராமத்தில் சனத்தொகை அடர்த்தியை அதிகரிப்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், கலாப்ரியா கிராமத்திற்கு செல்வோருக்கு சில நிபந்தனைகள் காணப்படுகின்றது.

நகரத்தில் இருந்து கிராமத்திற்கு வந்தால் ஒரு கோடி ரூபாய்: ஐரோப்பிய நாடு ஒன்றின் புதிய திட்டம் | Italian Region Calabria Offering Almost 25 Lakhs

விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது மற்றும் அவர்களின் விண்ணப்பத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து 90 நாட்களுக்குள் கலாப்ரியாவுக்கு செல்லத் தயாராக இருக்க வேண்டும்.

அதேவேளை, இந்த நகரத்திற்கு உள்வரும் குடியிருப்பாளர்கள் ஒரு சிறு வணிகத்தையாவது நிறுவுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

நகரத்தில் இருந்து கிராமத்திற்கு வந்தால் ஒரு கோடி ரூபாய்: ஐரோப்பிய நாடு ஒன்றின் புதிய திட்டம் | Italian Region Calabria Offering Almost 25 Lakhs

அத்தோடு, இத்தாலியின் “கால்விரல்” என வர்ணிக்கப்படும் கலாப்ரியா, கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற தளமாக காணப்படுகின்றமை குறிப்படத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *