இலங்கையின் சுற்றுலா தலமொன்றுக்கு கிடைத்த உயரிய விருது

அதிகளவு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சுற்றுலாத்துறைக்கு பெயர் போன நாடாக இருக்கும் இலங்கையில் பல அழகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதன் மூலம் சுற்றுலாத்துறையில் சிறந்த நாடாக இலங்கை திகழ்கிறது.

அந்தவகையில், அண்மையில் பிரிடிஷ் கில்ட் ஆஃப் டிராவல் ரைட்டர்ஸ் (British Guild of Travel Writers) இனால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த உலக சுற்றுலாத் திட்டத்திற்கான விருதினை இலங்கையின் சுற்றுலாத்தலம் ஒன்று பெற்றுள்ளது.

விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது

இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் கந்தானையில் ஆரம்பித்து நுவரெலியாவில் முடிவடையும் வகையில் அமைந்துள்ள 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நடந்து செல்ல கூடிய பாதையாகவுள்ள மலைப்பகுதியான பெக்கோ டிரெயில்ஸ் பகுதியே இந்த விருதினை பெற்றுள்ளது.

இலங்கையின் சுற்றுலா தலமொன்றுக்கு கிடைத்த உயரிய விருது | Pekoe Trails Got Best World Tourism Project Award

மேலும் பிரிடிஷ் கில்ட் ஆஃப் டிராவல் ரைட்டர்ஸால் (British Guild of Travel Writers) இனால் இன்னும் ஐந்து இடங்கள் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சுற்றுலா தலமொன்றுக்கு கிடைத்த உயரிய விருது | Pekoe Trails Got Best World Tourism Project Award

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *