அகதிகள் முகாம் மீது தாக்குதல் : உரிமை கோரியது இஸ்ரேல்

காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் படைத்துறை செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி உறுதிப்படுத்தினார்.

இந்த தாக்குதல் மூலம் ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதியைக் கொன்றதுடன் ஹமாஸின் சுரங்கப்பகுதியும் தகர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன் 150 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை அடுத்து இடிந்து விழுந்த குடியிருப்பு பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தோர் சடலங்களாக மீட்கப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

அகதிகள் முகாம் மீது தாக்குதல் : உரிமை கோரியது இஸ்ரேல் (முதலாம் இணைப்பு) (படங்கள்) | Attack On Refugee Camp In Northern Gaza Many Dead

இந்த ஜபாலியா பகுதியில் எட்டு மிகப்பெரிய அகதிகள் முகாம் உள்ளதுடன் அங்கு 116,000 பாலஸ்தீனிய அகதிகள் ஐநாவால் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *