சீன மொழி மையம் ஒன்றை இலங்கையில் நிறுவ ஒப்பந்தம்

சீன திறந்த பல்கலைக்கழகமும், இலங்கை திறந்த பல்கலைக்கழகமும் உயர்கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும், சீன மொழி மையம் ஒன்றை இலங்கையில் நிறுவவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சர்வதேச ஒத்துழைப்பு, அறிவார்ந்த ஒத்துழைப்பு, கலாச்சார தொடர்பு மற்றும் நட்பு ஆகியவற்றை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனடிப்படையில், சர்வதேச ஒத்துழைப்பு, கல்வித்துறை ஒத்துழைப்பு, கலாச்சார இடைச் செயற்பாடுகள் மற்றும் நட்புறவை ஊக்குவித்தல் போன்றவற்றை மேம்படுத்தலாம்.

மேலும், இதனை நோக்கமாகக் கொண்டு உயர்கல்வி ஒத்துழைப்புக்களுக்காக சீனாவின் ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒத்துழைப்புத் பிரிவின் கீழ் சீன மொழி நிலையமொன்றை எமது நாட்டில் ஸ்தாபிப்பதற்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகம், ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் வரையறுக்கப்பட்ட சீனா வங்கிக்கும் இடையிலான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு குறித்த தரப்பினர்கள் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *