புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவளிக்காத தலைவரே ரணில் மொட்டு கட்சி தெரிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவளிக்காத தலைவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

‘‘யுத்தத்தை கண்டுகொள்ளாததை போன்று 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது மத்திய வங்கியில் பாரிய கொள்ளையொன்று இடம்பெற்ற போது அதனை கண்ணை மூடிக்கொண்டு அவதானித்த தலைவரே ஜனாதிபதி விக்கிரமசிங்க.

எவ்வாறாயினும், இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க பொதுஜன பெரமுன தீர்மானித்தது.

ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சி நடைபெறப் போவதை தமது கட்சி அறிந்துக்கொண்டதாலேயே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க தீர்மானித்தோம். அந்த முடிவு சரியானது என தற்போது நிரூபணமாகியுள்ளது.‘‘ என்றார்.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

சிலர் ஜனாதிபதியை நேரடியாகவும் கருத்து ரீதியாக தாக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலைளயில், சாகர காரியவசமின் இந்த கருத்து சர்ச்சைக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *