இலங்கையில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இந்தியர்களை மீள அனுப்பும் நடவடிக்கைகள் மே 29 ஆம் திகதி ஆரம்பம்

இந்தியாவிலிருந்து பல்வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தந்த பெருமளவிலான இந்திய பிரஜைகள் கொரோனா கோவிட்19 தொற்று காரணமாக மீண்டும் தாயகம் திரும்ப முடியாது நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கையில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இந்தியர்களை மீள அனுப்பும் நடவடிக்கைகளை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக மே மாதம் 29ஆம் தேதி கொழும்பிலிருந்து மும்பைக்கு விசேட விமானமொன்றை ஈடுபடுத்தவுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் இந்த சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நாட்டிற்கு அழைத்து செல்லப்படுவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
அவசர தேவைகளுக்காக 0094771222405 என்ற தொலைபேசியூடாக தொடர்புக் கொள்ள முடியும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *