டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என அமெரிக்க வழக்கறிஞர்கள் குழு தெரிவிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி வாஷிங்டன் நகரில் வன்முறைக் கும்பலைத் தூண்டியதால் எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு அவர் தகுதியற்றவர் என தெரிவித்தனர்.

அண்மையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலேயே ஆலோசகர் குழுவின் சட்டத்தரணி ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டிரம்ப் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது ஆதரவாளர்களை கலவரத்திற்கு ஊக்குவித்தார்.

இதன் காரணமாகவே, 2024ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *