எம்பிக்களின் காப்புறுதி தொகை அதிகரிப்பு!

 

அடுத்த வருடத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் காப்புறுதித் திட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இதன்போது, 2024 ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த திட்டத்தை வருடாந்த வரவு – செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகளுடன் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் செயற்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ரணில் விக்ரமசிங்க: உருவானது புதிய சர்ச்சை
தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ரணில் விக்ரமசிங்க: உருவானது புதிய சர்ச்சை

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயது வரம்பில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் சமூக பாதுகாப்பு வரி திருத்தங்களின் பொருட்டு வரித்தொகையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அறவிடப்படும் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் என்பனவற்றாலேயே காப்புறுதித் திட்டத் தொகை அதிகரிக்கப்படுவதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *