அமெரிக்காவில் 18 பேரைக் கொன்ற மர்ம நபர்: காட்டில் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் மைனேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேரைக் கொன்ற நபர் மூன்று நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் லிஸ்பன் பகுதியில் உள்ள காட்டுக்குள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை விளையாட்டு கூடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.மேலும், கேளிக்கை விடுதிக்குள்ளும் நுழைந்த அந்த நபர் அங்கிருந்தவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றார்.

இந்தநிலையில், கொடூர தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததுடன் 13 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவில் 18 பேரைக் கொன்ற மர்ம நபர்: காட்டில் சடலமாக மீட்பு | Maine Mass Shooting Suspect Found Dead

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதேவேளை, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தலைமறைவான குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் இருந்த சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியது 40 வயதான ராபர்ட் கார்ட் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர், இராணுவத்தில் ரிசர்வ் பிரிவில் இருந்த ராபர்ட் தலைமறைவான நிலையில் அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

அமெரிக்காவில் 18 பேரைக் கொன்ற மர்ம நபர்: காட்டில் சடலமாக மீட்பு | Maine Mass Shooting Suspect Found Dead

இந்நிலையில், 18 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த குற்றஞ்சாட்டப்பட்ட ராபர்ட் கார்ட் 48 மணி நேர தீவிர தேடுதலுக்கு பின் லிஸ்பன் பகுதியில் உள்ள காட்டுக்குள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில்பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ராபர்ட் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *