இரவு நேரங்களில் கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

 

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது கைகளிலும் மொபைல் போன் தவழுக்கிறது. 90களில் வாழ்ந்தவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது இயற்கை தான். ஆனால், இன்று பெரும்பாலானவர்களின் பொழுதுபோக்காக மொபைல் போன் தான் உள்ளது.

ஆனால், நாம் பொழுதுபோக்காக நினைக்கும் மொபைல் போன் நமது உடலில் பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும். ஏன், உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்திவிடும். இன்று அதிகமானோர் இரவு நேரங்களில் மொபைல் போனை பயன்படுத்தும் பழக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு இரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்துவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

இரவுநேர மொபைல் பயன்பாடு

இரவு நேரங்களில் மொபைல் போன் பயன்படுவதால், இன்று பெரும்பாலானோர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். அதே போல், இரவில் தூங்கி எழுந்தாலும், தூங்கிய உணர்வு இருப்பதில்லை. மேலும், பலருக்கு மனஅழுத்தம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம் காரணமாக நீரிழிவு பிரச்னை, டயாபெட்டீஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைலில் BlueLight என்ற ஒரு அமைப்பு உள்ளது. இது கருவிழி வழியாக நமது மூளைக்கு சென்று, ஹைப்போதலாமஸ் என்ற அமைப்பை பாதிக்கிறது. இதனால் நமக்கு மூளை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிலும், நாம் குழந்தைகளுக்கு மொபைல் போனை கொடுப்பது மிகவும் தவறு. குழந்தைகளுக்கு அதிகமாக மொபைல் போன் கொடுக்கும் போது அவர்களது அறிவாற்றல் பாதிக்கப்பட்டு, ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் சிறுவயதிலேயே ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்

தூக்கத்திற்கு செல்லும் முன் 2 மணி நேரத்திற்கு முன் செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் தூங்கி எழுந்த பின் ஒரு மணி நேரம் மொபைல் போன் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். காலையில் எழுந்தவுடன், காலை சூரிய ஒளி நம்மீது படும்படி, உடற்பயிற்சி செய்வது நல்லது. அதிகப்படியான நேரங்களை போன் உபயோகிப்பதில் செலவிடாமல் இருப்பது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *