காசாவின் தற்போதைய நிலை

ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட 97 பேரின் அடையாளத்தை இராணுவத்தால் உறுதிப்படுத்த முடிந்ததாக இஸ்ரேலின் உயர்மட்ட இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஹமாஸின் ஆட்சி திறனை அகற்றும் நோக்கத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும், “இராணுவம் அடுத்தகட்ட போருக்கு தயாராகி வருகிறது,” என்று அவர் கூறினார்.

இராணுவ வீரர்கள் கடந்த சனிக்கிழமை முதல் 222 பேர் இறந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Watch: How Israel was created👇

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இஸ்ரேல் நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

ஆனால், ஏற்கனவே பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட நிலத்தில் இஸ்ரேல் நாடாக எப்படி மாறியது?

video
தமது நாட்டு மக்களை தற்காலிகமாக திரும்பப்பெறுகிறது பிரிட்டன்

இஸ்ரேலில் உள்ள தனது தூதரகம் மற்றும் தூதரகத்தில் உள்ள ஊழியர்களின் குடும்பங்களை பிரிட்டன் தற்காலிகமாக நாட்டிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரும்பப் பெறுகிறது என்று இங்கிலாந்து வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

எங்கள் தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் முழுவதுமாக பணியாளர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு தூதரக சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

இந்நிலையில், எரிபொருள் இல்லாததால், ஒரே மின் உற்பத்தி நிலையம் முடங்கியதால், காசா பகுதி இருளில் மூழ்கியது.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மிக நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது.

வெஸ்ட் பேங்க் எனப்படும் மேற்கு கரை மற்றும் காசா பகுதிகளில் பாலஸ்தீனர் அதிகம் உள்ளனர்.

காஸாவில் இன்னும் எரிபொருள் உள்ளது, ஆனால் சில மணிநேரங்களில் தீர்ந்துவிடும்: ICRC

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) கூறுகையில்,

தடை செய்யப்பட்ட காசா பகுதியில் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு இன்னும் கொஞ்சம் எரிபொருள் உள்ளது.

வைத்தியசாலைகள் உட்பட பல சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது.

சில மணிநேரங்களில் இருப்பும் தீர்ந்துவிடும் என மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த, 2007ல், காசா பகுதியை ஹமாஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அன்றுமுதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மோதல் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *